Home செய்திகள் ஆசிரியர்களின் பிரம்படியினால் செம்மையாக வளர்ந்து உள்ளேன். செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மாணவர்களுக்கு அறிவுரை

ஆசிரியர்களின் பிரம்படியினால் செம்மையாக வளர்ந்து உள்ளேன். செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மாணவர்களுக்கு அறிவுரை

by mohan

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் வரவேற்றார்.ஹங்கேரி நாட்டின் ஆராய்ச்சியாளர் பலாஸ் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் பரசுராமன் பத்மநாபன் மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில் , நாங்கள் படிக்கும் பொழுது ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள். எதற்காக என்றால் நாங்கள் செம்மையாக வளரவேண்டும் என்பதற்காகத்தான் அடிப்பார்கள். அரசுப்பள்ளியில் மரத்தடியில் படித்தேன். மரத்தடியில் படிக்கும் பொழுது மழை பெய்தால் பள்ளி விடுமுறை விட்டுவிடுவார்கள். 10 வயது வரை அரசு பள்ளியில் எங்கள் கிராமத்தில் இருந்த பள்ளியில் படித்துவிட்டு பிறகு சிதம்பரத்திற்கு ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன். அரசு பள்ளியில் படித்ததால் வாழ்வின் உச்சத்தை அடைந்து உள்ளேன். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன் . உலகத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். இந்த உயரத்திற்கு காரணம் என்னுடைய கல்வி மட்டுமே .கல்வியுடன் பணிவும் இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடையலாம். தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் பிறந்த நான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளேன் என்று சொல்லலாம். அதற்கு காரணம் , ஆசிரியர் சொற்படி கேட்டு நன்றாக படித்ததால் தான் நல்ல நிலையில் உள்ளேன்.அரசு பள்ளியில் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ள என்னையே நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். என்று பேசினார். மாணவர்கள் கீர்த்தியா, ஐயப்பன்,சிரேகா, பாலசிங்கம், ஜனஸ்ரீ ,ஜோயல்,நதியா,வெங்கட்ராமன் உட்பட பலர் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர் .சிறப்பாக கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!