Home செய்திகள் கொரோனா காலகட்டத்தில் சேவையாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு பிரமாண்ட ஓவியம் மூலமாக நன்றி தெரிவித்த இளம்பெண்.

கொரோனா காலகட்டத்தில் சேவையாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு பிரமாண்ட ஓவியம் மூலமாக நன்றி தெரிவித்த இளம்பெண்.

by mohan

கொரோனா நோய்தொற்று பரவல் காலத்தில் மக்களின் நலனுக்காக தன்னலம் கருதாமல் பணிபுரிந்த முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், ஊடகத்தினர் உள்ளிட்டோரு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த கீர்த்திகா என்ற இளம்பெண் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கோலப்பொடியை பயன்படுத்தி நன்றி தெரிவித்து ஓவியத்தை வரைந்துள்ளார்.கடந்த 3நாட்களாக பல்வேறு வண்ண கோலப்பொடியை பயன்படுத்தி மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் தொடங்கி விவசாயிகள், உணவு விநியோக நிறுவனங்கள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் படங்களையும் நன்றி என்ற எழுத்துக்கள் போன்று பிரமாண்டஓவியமாக வரைந்துள்ளார்.இளம்பெண் கீர்த்திகா ஏற்கனவே காபி பொடி ஓவியம் மூலமாக சமூகநலன் சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுவற்றுவரும் நிலையில் தற்போது முன்களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து ஓவியத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.கொரோனா காலகட்டத்தில் மக்களின் நலன் காக்க அரும்பாடுபட்டவர்களுக்கு சமர்பணம் செய்யும் வகையில் இந்த ஓவியத்தை வழங்கியதாக இளம்பெண் தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com