Home செய்திகள் வெளிநாட்டு பரிசுகளை பகிர்ந்தளித்த மாணவி

வெளிநாட்டு பரிசுகளை பகிர்ந்தளித்த மாணவி

by mohan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி மகாலெட்சுமி தனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்கு சந்தோசத்துடன் பகிர்ந்தளித்து அனைவைரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மகாலெட்சுமி கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த தகவலை இணையத்தில் தெரிந்து கொண்டு யோகாநாதன் புத்ரா என்பவர் தபால் மூலம் ஜெர்மனியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பென்சில்கள்,30க்கும் மேற்பட்ட பேனாக்களையும் , கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசு பொருள்களை குவியலாக தபால் மூலம் பள்ளிக்கு அனுப்பி இருந்தார். பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவி செய்த அடுத்த செயல்தான் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.தான் பெற்ற வெளிநாட்டு பரிசுகள் அனைத்தையும் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு சந்தோசத்துடன் வழங்கினார் .

பொதுவாக இளம் வயதில் மாணவர்களுக்கு தனக்கு தன் தந்தை வாங்கி கொடுத்த பென்சிலை கூட பக்கத்தில் இருக்கும் மாணவருக்கு கொடுக்க கூட மனது வராது .ஆனால் தனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை சக மாணவர்களுக்கு மகிழ்வுடன் வழங்கியது தொடர்பாக மகாலெட்சுமி கூறியது :எங்கள் பள்ளியில் கீழே கிடந்த பணத்தை எடுத்து கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தது எனக்கு பெருமையாக இருந்தது.இனி வரும்காலங்களில் தொடர்ந்து இது போன்று செயல்படவேண்டும் என்று முடிவெடுத்தேன்.எனது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.வறுமையிலும் நேர்மையை பாராட்டி ஜெர்மனியில் இருந்து எனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை எனது சக மாணவர்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்து மகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன்.இந்த வாய்ப்பை வழங்கிய பள்ளிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.என்று கூறினார்.

நேர்மை மாணவியின் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : மாணவி மகாலட்சுமியின் பகிர்ந்தளிக்கும் எண்ணமும்,நேர்மை செயல்பாடும் எங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியில் இருந்து வந்துள்ள பரிசுகளை மாணவியிடம் காண்பித்தபோது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார் . சிறிது நேரத்தில் என்னிடம் வந்து,சார் இந்த பரிசுகள் அனைத்தையும் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.எனக்கோ நடப்பது கனவா,நினைவா என்று எனக்கு நானே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.ஏனென்றால் , வங்கிக்கோ ,வேறு எங்குமோ செல்லும்போது அருகில் இருப்பவரிடம் நமது பேனாவை கொடுத்தால்கூட உடனே கேட்டு பெற்றுக்கொள்வோம்.அல்லது மூடியை கழட்டி கொண்டு கொடுப்போம்.ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த பேனாவையும்,பென்சிலையும் இந்த மாணவி சக மாணவர்களுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னபோது எனக்கே கொஞ்சம் அதிசயமாக பட்டது.மாணவியின் நேர்மையான செயல்பாடே பெரும் வியப்பாக இருந்த நிலையில், பரிசுகளை பகிர்ந்து அளிக்கின்றேன் என்று சொன்னது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தோம்.பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.மாணவியின் செயல்பாட்டினை ஆசிரியர்களும், மாணவர்களும்,பெற்றோர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!