Home செய்திகள் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்கப்பட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:ஆர் பி

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்கப்பட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:ஆர் பி

by mohan

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது மதுரை மாவட்டம் , அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திண்டுக்கல் , மதுரை , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பை அரவை அனுப்புகின்றனர் .எடப்பாடியார், தலைமையிலான மாண்புமிகு ஒ.பி.எஸ் வழிகாட்டுதலோடு கடந்த அம்மா ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு எங்களுடைய முயற்சியால் ரூ 22 கோடி வரை வழங்கப்பட்டது . அதே போல், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கு ஒதுக்கீடாக ரூ 6 கோடி வழங்கப்பட்டது .கோவியட்- கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் அரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது . தற்போது, 60,000 மெட்ரிக் டன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 2022 – ம் ஆண்டு அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர் .தற்போது, 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் கரும்பு அறுவடைக்குத்தயாராக உள்ள நிலையில் அந்த கரும்பும் தற்போதைய சூழலில், அலங்காநல்லுார் கொண்டு வரவே அதிக வாய்ப்பு உள்ளது .அரைவை தொடங்காததால் ஆலை உபமின் நிலையம் செயல்படாமல் உள்ளது . இதனால் அரசுக்கு ரூ .110 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கரும்பு விவசயாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து, கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் , முன்னாள் முதலமைச்சர், ஒ.பி.எஸ் , முன்னாள் முதலமைச்சர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் ,அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர் . எனவே,அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலையை இயக்கப்பட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரை கேட்டுக்கொள்கிறேன் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!