Home செய்திகள் மதுரையில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பு தமிழிசை பங்கேற்பு.

மதுரையில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பு தமிழிசை பங்கேற்பு.

by mohan

மதுரையில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிரிந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில்தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறோம்,அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றார்.முழுமையாக இன்னும் கொரோனா தொற்றுப் போகவில்லை., மதுரையில் கொரோனா தடுப்பூசி 60 சதவீதம் போடபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மூன்றாவது அலையை தடுக்க முடியும் என்றார்.அனைவரும் தானாக முன்வந்து முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அதிகமான தடுப்பு ஊசி செலுத்தினால் தான் இயல்பான நிலைக்கு திரும்ப முடியும் எனக் கூறினார்.புதுச்சேரியில் இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பெண்களை போலீசார் பாதுகாத்து அழைத்துச் செல்வது போல் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்குபுதுச்சேரியில் வேறு விதமாக அணுகுகிறோ தமிழ்நாட்டில் வேறு விதம், அப்படிப் பார்த்தால் புதுச்சேரியில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.கடந்த முறை மதுரைக்கு வந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்னால் செல்ல முடியவில்லை, அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கிறது அது மக்களுக்கான முடிவாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com