Home செய்திகள் பிரியங்கா காந்தி கைது சம்பவத்தை கண்டித்து திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது சம்பவத்தை கண்டித்து திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by mohan

உத்திர பிரதேசத்தில் விவசாயிகளை மிரட்டும் வகையில் பேசிய மத்திய இணை அமைச்சரைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்ய சம்பவத்தை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மிரட்டும் விதமாக பேசிய மத்திய இணை அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் . திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்களையும் விவசாயிகளை மிரட்டும் தொனியில் பேசிய மத்திய இணை அமைச்சரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரிக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிர்வாகி பிரியங்கா காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார் சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மதுரை தெற்கு மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஆர்ப்பாட்டத்தில் 9 விவசாயிகள்உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரியங்கா காந்தியை கைது செய்த சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயராமன், நகர தலைவர் சௌந்திரபாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட மகளிரணி தலைவி பிரவீனா, வட்டாரத் தலைவர்கள் முருகேசன், சங்கன்,தளபதி, சேகர், பாண்டியன், ஆனந்த், ராஜா தேசிங்கு, வீரபத்திரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com