
மதுரை மாவட்டம் சோழவந்தான் – வாடிப்பட்டி பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பால பணிகள் முடங்கியதால் 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சர்வீஸ் சாலையில் அவதிபடும் பொதுமக்கள். காற்றில் பறந்த எம்.பி ,எம்எல்ஏ, தேர்தல் வாக்குறுதிகள்.மதுரை மாவட்டம் சோழவந்தான் – வாடிப்பட்டி பகுதிகளை இணைக்கும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் ரயில் வரும் போது, கேட் மூடப்பட்டு வாகனங்கள் இருபுறமும் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ரயில்வே தண்டவாளங்களின் மேல் பகுதியில் இணைப்பு பாலம் கட்டப்பட்டது. பின்னர் பாலத்தின் இரு பகுதிகளை இணைப்பதற்கு மாநில அரசு சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் 6 ஆண்டுகளாக நடந்தன. சுமார் 20 கோடிக்கு மேல் செலவு செய்தநிலையில் பாலத்தின் இருபுறமும் சாலையோடு இணைக்கப்படாமல் திடீரென பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின் போது அதிமுக எம்பி ரவீந்திரநாத், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், தற்போதைய திமுக எம் எல் ஏ வெங்கடேஷ் ஆகியோர் பாலத்தை விரைவில் திறப்பதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எம்.எல்,ஏ எம்பி என யாருமே மேம்பாபால பணிகளை முடித்து போக்குவரத்தை சீர் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வாகனங்கள் சென்று வர முறையான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமலும், மேம்பால பணிகள் கிடப்பில் போடபட்டதாலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிபடும் அவல நிலை தொடர்கிறது. அடுத்த தேர்தல் அறிக்கையிலும் இந்த பாலத்தை விரைவில்கட்டி முடிப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறும் என இப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.