வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்.

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடைகளை சாலைகளில் விட்டுவிடுகின்றனர்.இதனால் கால்நடைகள் தெருக்கள் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இடையூறாக இருக்கிறது. மேலும் இதனால் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.இது குறித்து ஏற்கனவே பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே மாநகராட்சி நிர்வாகம்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்