Home செய்திகள் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காயமின்றி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காயமின்றி உயிருடன் மீட்பு

by mohan

திருமங்கலம் அருகே பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா அங்குள்ள கிராமத்தில் கோவில் பூசாரியாக உள்ளார் இவருடைய மனைவி பவுன்தாய்(61) அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பன்னிக்குண்டு கண்மாய்க்கரை பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றுப் பகுதியில் பவுன்தாய்

நடந்து சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார்.கிணற்றில் 4 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது இதனால் மூதாட்டி தண்ணீரில் மூழ்கவில்லை. அங்கு அலறல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்பவர்கள் கிணற்றுக்குள் பார்க்கும்பொழுது மூதாட்டி ஒருவர் கிணற்றுக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த ஆடு மேய்ப்பவர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். கிணற்றில் விழுந்த மூதாட்டி காப்பாற்ற கிராமத்தினர் முற்பட்டபோது கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாத காரணத்தால் பொதுமக்களால் மூதாட்டியை இல்லாததால் மீட்க முடியவில்லை. உடனடியாக அப்பகுதி மக்கள் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி பவுன் தாயை எந்தவித காயமும் இன்றி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்,,,,,,, இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கினாலும் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மூதாட்டி கீழே விழுந்து எந்த காயமும் இன்றி மூதாட்டி உயிர் தப்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!!!!!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com