Home செய்திகள் மதுரையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 10ஏக்கர் வாழை மரம் , வெற்றிலை கொடிக்கால் சாய்ந்தது: 20 லட்ச ரூபாய் நஷ்டம் என விவசாயி கவலை

மதுரையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 10ஏக்கர் வாழை மரம் , வெற்றிலை கொடிக்கால் சாய்ந்தது: 20 லட்ச ரூபாய் நஷ்டம் என விவசாயி கவலை

by mohan

மதுரை மாவட்டத்தில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திடீரென நேற்று மாலை மதுரை மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், அலங்காநல்லூர்,  உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.அதே போன்று மாநகர பகுதிகளான கோரிப்பாளையம், ஆனையூர், மாட்டுத்தாவணி , அண்ணாநகர், புதூர், சிம்மக்கல், HMS காலனி, விராட்டி பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாலை 4மணி முதல் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று இடியுடன் கூடிய பரவலான மழை பெய்தது.நேற்று முந்தினம் திடீர் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் மதுரை எஸ் எம் எஸ் காலனி ஆனந்தா நகர் பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் வாழை பயரிடப்பட்டிருந்தது. வாழை குலை தள்ளக்கூடிய நிலையில் இருந்த வாழை மரம் அனைத்தும் சாய்ந்து முறிந்துள்ளது.அதேபோன்று சக்திவேல், கணேசன், மோகன், ராமலிங்கம் உள்ளிட்ட விவசாயிகளின் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து முறிந்துள்ளது. இதில் 20 ரூபாய் மதிப்பிற்கு விவசாயிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.இதே போன்று பழங்காநத்தம். பை-பாஸ் பொன்மேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மரங்கள் சரிந்து மின்கம்பங்கள் சேதமடைந்தது. அதை பராமரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.சோழவந்தான் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததையடுத்து விவசாயிகள் நெல் மூட்டைகளை பத்திரமாக பாதுகாப்பு வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com