அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டுகோள் :மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் :மதுரைமதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு டி கல்லுப்பட்டியிலுள்ள அம்மாகோவிலில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம்,பா.நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்இந்த கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, பிச்சை ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ் சுமதி சாமிநாதன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார், வாசிமலை, மாவட்ட கழக நிர்வாகிகள் திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ் மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் தமிழ்ச்செல்வன் கே தமிழழகன்,காசிமாயன், மகேந்திர பாண்டியன், சரவண பாண்டியன், ராமகிருஷ்ணன், சிங்கராஜ பாண்டியன், போத்தி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஆர் பி உதயகுமார் நிறைவேற்றினார்.தீர்மானம் 1.புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் கழகத்தைக் காணாமல் போகச் செய்து விடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக்கணக்குகளை தூள் தூளாக்கி மீண்டும் அஇஅதிமுக கழகத்தை கழகத்தை உலகம் புகழும் இயக்கமாக காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புயல் வீசும் அனைத்தும் தகர்ந்து போய்விடும் ; இனி தமிழ் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும் ” என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து ,புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக செய்து காட்டினோம் இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர் .மாபெரும் கூட்டணி , பல ஆயிரம் கோடி செலவு , பகட்டான வாக்குறுதிகள் , பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து , மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி , சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவிதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது .சூழ்ச்சிகள் , தந்திரங்கள் , சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து , மக்களின் பேரன்பைப் பெற்று , கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதுஉழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும் , நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர் ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக , அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள , கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கபோவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் , அதை ஊர் அரிய தொலைக்காட்சி ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்மகத்தான இரு தலைவரின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறயே தவிர , ஒரு குடும்பத்தில் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் , இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த 23.5.2021 – ஆம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது அதன் அடிப்படையில், திருமதி சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி , கழகத்தின் வளர்ச்சிக்கும் , புகழுக்கும் . இழுக்கும் , பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் , ஆகியோர்களுக்குமதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் . என்று தீர்மானம் நிறைவேற்றிப்பட்டதுஅதனைத் தொடர்ந்துசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம், சட்டமன்ற கொறாடாவாக எஸ் பி வேலுமணி மற்றும் துணை கொறாடா,செயலாளராக,, பொருளாளர் ஆகியோர்களை ஏகமனதாகத் தேர்வு செய்த அ.இஅ. திமுக சட்டமன்ற உறுப்பினர்களு.க்கு நன்றி தெரிவித்தும்அம்மா அரசின் முயற்சியால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தேவையான நிலம் , சாலை ,குடிநீர் மற்றும் மின்சார வசதி செய்து கொடுத்து கொரோனாதொற்றின் பரவல் காரணமாக கட்டுமான பணியின் நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான பணி தாமதம் ஏற்பட்டுள்ளது ஆகவே பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான பணி தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும்சிமெண்ட் கம்பி செங்கல் ஆகிய கட்டுமான பொருட்கள் கடுமையாக விலையேற்றம் ஆகியுள்ளது ஆகவே இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்கோவியட் நோயால் இறந்தவர்களுக்கு இணை நோயால் இறந்தவர்கள் என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது இதனால் அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்காமல் போகிறது ஆகவே அவர்களுக்கு உரிய சான்றுகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் தமிழகத்திற்கு தடுப்பூசியை அதிகமாக கேட்டுப் பெற வேண்டும் அதனை அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.