Home செய்திகள் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும்? என மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும்? என மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

by mohan

அதில், “தற்போது கொரோனா பரவல் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கை காலியாக இருக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணம் அதிகப்படியாக வசூல் செய்யப்படுகிறது மேலும் அரசு கூறியபடி 50% படுக்கை வசதிகள் காலியாக வைப்பதில்லை இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லைஎனவே, தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி காலி இடங்கள் மற்றும் சிகிச்சை கட்டணத்தை இணையதளத்தில் வெளியிடவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் 50% படுக்கை வசதி ஒத்துகவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு.1) கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற முன்களப்பணியாளர்களை நீதிமன்றம் பாராட்டுகிறது.2) இந்த சிக்கலான நேரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது3) தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் குறித்த அரசாணை அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?4) கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும்?5) தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்?6) தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் விபரம் குறித்த அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை கண்காணிக்க வேண்டியது யார்?7) இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தது தனியார் மருத்துவமனை மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன? அந்தப்புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?8) உத்திரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வசதி கட்டணம் ஆகியவற்றுக்காக அரசே ஏன் தனியாக இணையதளத்தை தொடங்கக்கூடாது?9) தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்?போன்ற விபரங்களை மத்திய, மாநில அரசுகள் மே 12-ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். மதுரைக்கிளை கேள்வி .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!