மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட வாழைத் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு பூத் ஏஜெண்டுகளை வெளியே அனுப்பி வைத்து கேமராவை ஆப் செய்து அதன்பின்பு EVM ஐ திறந்து மறுபடியும் சீல் வைத்தது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வாக்குச்சாவடியின் முன்பு மறியலில் ஈடுபட்டனர் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதுவாக்கு இயந்திரத்தில் சீல் வைத்த பின்னர், ஏஜண்ட்டிற்கு தெரியாமல் அதிகாரிகள் பேட்டரியை கழற்றி உள்ளனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.வேட்பாளர் பூமிநாதன் அதிகாரிகளிடம் பேசி returning officer ஐ நேரில் சந்தித்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் பின்பு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து கூட்டத்தினரிடம் கலைந்து போக சொல்லி கேட்டுக் கொண்டார் அதன் பின்பு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.