Home செய்திகள் சசிகலாவின் அரசியல் விலகல் நமக்கு வருத்தம் அளிக்க கூடிய செய்தி என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார் எங்களுக்கும் அப்படித்தான் உள்ளது. அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டேவிட் அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டேவிட் அண்ணாதுரை கூறுகையில்:தொகுதி மக்களுக்கு செய்ய உள்ள நலத்திட்டங்கள் குறித்த கேள்விக்கு:திருப்பரங்குன்றம் ஒரு அழகான பகுதி. கிராமப்புறம் நகர்ப்புறம் சரிசமமாக இருக்க கூடிய ஒரு அற்புதமான தொகுதி. அரசியல் சிறப்பு, ஆன்மீகச் சிறப்பு அத்தனையும் கொண்ட மக்கள் வாழக்கூடிய ஒரு அற்புதமான தொகுதி.தொகுதியில் நவீன காலத்துக்கான முன்னேற்றத்தை செய்து கொடுக்க வேண்டிய அவசியமான சூழ்நிலை இருக்கிறது.முக்கியமாக அரிதாக மலரக் கூடிய மல்லிகை மிக அதிகமாகவே மலரக் கூடிய தொகுதி திருப்பரங்குன்றம். அந்த மல்லிகைக் என்று ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி அவர்கள் கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இதைச் சொல்லி இந்த திட்டத்தை நாங்கள் கொண்டுவருவோம் என்று சொன்னார்கள்.அந்த திட்டத்தை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன். மல்லிகை ஏற்றுமதிக்கு மல்லிகை மூலமாக வளரக்கூடிய அந்த தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துநாங்கள் செய்தது மட்டுமல்லாமல் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த தென் மாவட்டத்தை முன்னேற்றக் கூடிய வகையில் மதுரை தூத்துக்குடி தொழில்வழிச்சாலை என்ற தொலைநோக்குத் திட்டமாக அவர்கள் வைத்திருந்தார்கள். அப்படி அந்த இண்டஸ்ட்ரியல் காரிடார் அமைகின்ற நேரத்திலே திருப்பரங்குன்றம் தொகுதி மிகப் பெரிய பலனை அடையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் திட்டத்தையும் மறந்துவிட்டார்கள். மக்கள் செல்வன் தலைமையில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தொழிற்சாலை அமைப்பதற்காக அரும்பாடுபட்டு தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்போம்.அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையிலே டிடிவி அவர்கள் சொன்னதை போல வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கக் கூடிய அம்மா பொருளாதாரப் புரட்சி திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அறிவித்திருக்கிறார்கள். அந்தத் திட்டத்தையும் நாங்கள் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கின்றோம். நகர்ப்புறங்களை பொருத்தமட்டில் போக்குவரத்து நெரிசல் என்பது மாத்திரம் கிடையாது மாநகராட்சியுடன் இணைந்து பத்தாண்டு காலத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் நகர்புறத்தில் சேர்ந்து இருக்கக்கூடிய பகுதிகளுக்கு உரிய முன்னேற்றம் இல்லை.முக்கியமாக ஆழ்துளாய் பாதாள சாக்கடை திட்டம் என்பது முற்றிலுமாக இல்லாமல் இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையிலே நகர்மயமாக்கல் கூடிய வகையிலே அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன்.சசிகலா அவர்கள் அரசியல் இருந்து விலகியது அமமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு:எனக்கு வருத்தம் அளிக்க கூடிய செய்தி என்று தான் டிடிவி கூறியிருந்தார். அந்த வகையில் தான் நாங்களும் இருக்கிறோம்.தேர்தல் பிரச்சாரத்திற்கு சசிகலா வருவார்கள் என்ற கேள்விக்கு:அதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள். டிடிவி தினகரன் வரும் 29ம் தேதி திருநகர் பகுதியில் பிரச்சாரம் செய்து இருக்கிறார் அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். அவருடைய உரையை கேட்க மக்களும் அவருடைய தாயார் ஆவலுடன் இருக்கிறார்கள் என்றார். மேலும் டேவிட் அண்ணாதுரை முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சபாநாயகர் . காளிமுத்து வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com