Home செய்திகள் மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்.

மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்.

by mohan

சென்னை பெரு நகரங்களில் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மதுரை மாநகர் பகுதிகளுக்கு முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மதுரை மாநகர் பகுதிகளில் இயக்கப்பட நேற்று அரசு அனுமதி அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து,இன்றுமுதல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து. எம்ஜிஆர் பேருந்து நிலையம் வரையிலும், மேலும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லூர் வழியாக ஆரப்பாளையம் வரையிலும் ஆரப்பாளையத்தில் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருமங்கலத்தில் கும் மற்றும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வரையிலும். திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு குளிர்சாதனப் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது, மக்களின் வரவேற்பை பின்னர் அடுத்தடுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும்,இதற்காக குறைந்தபட்ச கட்டணமாக 15 முதல் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் வணிக மேலாளர்கள் தெரிவித்தனர். மேலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகரப் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!