அவனியாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் கல்யாண சீர் செய்த எம்எல்ஏ சரவணன்.

திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் கல்யாண சீர் செய்த எம்எல்ஏ சரவணன்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி ஆனந்தஜோதி இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.இந் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மலைச்சாமி இறந்துவிட்டார். திமுக கட்சி உறுப்பினரான இவர் மறைவிற்கு பின் இவரது மனைவி ஆனந்த ஜோதி வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.இந் நிலையில் தனது மூத்த மகள் அபிராமி திருமண ஏற்பாடு செய்து இதுகுறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணனிடம் பத்திரிகை அளித்தார். இதனையடுத்துதிருமண நாளான இன்று மணமகளுக்கு தாய் மாமன் சீராக பீரோ, கட்டில், பித்தளை அண்டா, குக்கர், கே ஸ் அடுப்பு உள்ளிட்ட 30 ஆயிரம் மதிப்புள்ள கல்யாண சீர் செய்து மணமக்களை ஆச்சரியப்படுத்தினார் .இதுகுறித்து மணமகள் கூறும்போது நாங்கள் எம்எல்ஏவை திருமணத்திற்கு மட்டும் அழைத்தோம் ஆனால் நாங்கள் எதிர்பாராமல் கல்யாண சீர் செய்து :எங்களை வியப்படையச் செய்து விட்டார் எனக் கூறினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்