கரும்பு அரவை செய்த பாக்கி பணத்தை வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கரும்பு அரவை செய்த பாக்கி பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும், ஆலை அரவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு முதல் தவணையாக அனுப்பி உள்ள ரூ.5 கோடியே 93 லட்சம் பணத்தை விவசாயிகளுக்கு காசோலையாக கொடுக்க வலியுறுத்தியும், ஆலை அலுவலகம் முன்பாக கஞ்சி காய்ச்சி, காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் ஆலை தொழிலாளர்களின் 10 மாத சம்பள பாக்கியையும் விரைந்து வழங்க வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்….

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்