Home செய்திகள் முன்னாள் எம்எல்ஏ சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது

முன்னாள் எம்எல்ஏ சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது

by mohan

சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச் செயலாளருமான எல் சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி மேல பெருமாள் பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் அவரது சமாதியில் மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி மரியாதை செய்தனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் அருகே உள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் சந்தானம் பிறந்தார் இவர் அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர் பார்வர்ட் பிளாக் கட்சியில் அகில இந்திய பொறுப்பிலும் மாநில பொறுப்பிலும் பதவி வகித்து சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார் இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது 58 கிராம கால்வாய் திட்டத்தினை தனது எம்எல்ஏ நிதியிலிருந்து பெரும்பங்கை நிதியாக வழங்கினார் இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் இவரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று சொந்த ஊரான மேல பெருமாள் பட்டியில் அவரது நினைவிடத்தில் நடந்தது இவரது மகன்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் கள்ளர் கல்விக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் முன்னாள் சேர்மன் இளங்கோ முனைவர் சுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தினர் சாந்தி பாண்டி ஜோதி நீதிபதி ஸ்ரீஜா சரோஜினி உட்பட பேரக்குழந்தைகள் சந்தானம் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து பூஜைகள் செய்தனர் இதில் அமமுக அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன் எஸ் ஆர் தங்கப்பாண்டியன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் ராஜா தமிழ் மாநில குழு விக்னேஷ் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிர் அணி செயலாளர் சுந்தரைசெல்விஒச்சாதேவர் உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் பொருளாளர் ஞான வனராஜா டாக்டர் ரவி துணைத்தலைவர் ஜோதி ராஜன் இயக்குனர்கள் உதய பாஸ்கரன் போஸ் சின்னண்ணன் மொக்கச்சாமி குபேந்திரன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விக்கிரமங்கலம் சக்கரப் நாயக்கனூர் ஜென்சிராணி பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!