மதுரையில் கல்லை போட்டு ஒருவர் கொலை:

மதுரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு மர்மக் கும்பல் கொலை செய்துள்ளது.மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பழனி. இவர், சம்பவதன்று அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தராம்.அப்போது ஏற்பட்ட தகராறில், பழனி மீது மர்மக் கும்பல் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனராம்.கொலை நடந்த இடத்தை, மதுரை காவல் துணை ஆணையர் சிவபிரசாத் பார்வையிட்டார்.இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..