Home செய்திகள் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்

சோழவந்தான் நெடுங்குளம் தேனூர் திருவாலவாய் நல்லூர் சித்தாலங்குடி செங்கோட்டை நகரி ரிஷபம் ஆகிய பகுதியில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சித்தாலங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளனர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் வெயிலிலும் மழையிலும் நனைந்து சில குவியல்களில் நெல் முளைத்திருக்கிறது இதை விவசாயிகள் கையிலெடுத்து காட்டி தங்கள் வேதனையை தெரிவித்தனர்.வயலூர் முத்துக்கருப்பன் என்பவர் தன்னுடைய 13 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல் சுமார் 700 மூட்டைகள் 23 நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து பாதுகாத்து வருகிறார் இதுகுறித்து அவர் கூறும்போது ஏற்கனவே விவசாயம் பல இன்னல்களுக்கு இடையே செய்துவருகிறோம் விவசாயம் செய்வதற்கு கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம் தற்போது நெல் விளைந்து அறுவடை செய்து அந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் 23 நாட்களாக களத்தில் போட்டு நெல் கொள்முதல் நிலையம் எப்போது எடுக்கும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறோம் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீரில் நெல் முளைத்து விலை போக முடியாத நிலை வரும் முன் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயி கல் குவித்து வைத்துள்ள நெல் அனைத்தையும் எடைபோட்டு அதற்கான உரிய பணத்தை வழங்கி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

இதேபோல் தேனூர் மணிகண்டன் என்ற விவசாயி சுமார் பத்து ஏக்கரில் 500 மூட்டை எடையுள்ள நெல் குவித்து வைத்திருக்கிறேன் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 9 நாட்களாக நெல் குவியல்களை காவல் காத்து வருகிறேன் அரசு உடனடியாக விவசாயிகள் மீது கருணை காட்டி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து எங்கள் போன்றவர்களுடைய துயர் துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இதுபோன்ற நேரத்தில் போர்க்கால அடிப்படையில் பாரபட்சமில்லாமல் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய பணத்தை செலுத்தி விவசாயிகளுடைய துயர் துடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!