
மதுரை மாவட்டத்தில் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கக்கூடிய எஸ் எஸ் சரவணன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதுரை சோழவந்தான் தொகுதியின் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவருமே அதிமுக எம்எல்ஏ என்பதாலும் இருவரும் கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது .இதனால் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் எம்எல்ஏ உடன் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.