Home செய்திகள் தேசிய நெடுஞ்சாலைக்கு சமமான சாலையை அமைக்கும் மதுரை  மாநகராட்சி – குவியும் பாராட்டு

தேசிய நெடுஞ்சாலைக்கு சமமான சாலையை அமைக்கும் மதுரை  மாநகராட்சி – குவியும் பாராட்டு

by mohan

100 வார்டுகள் அடங்கிய மதுரை மாநகராட்சியில்நகரப் பகுதியின் மிக அருகில் உள்ள உள்ள எழில் கொஞ்சும் ஒரு அழகிய கிராமம் தான் மாடக்குளம்.பெருகிவரும் ஜனத்தொகை யின் காரணமாக இந்தப் பகுதியில் போக்குவரத்து தேவைகளும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தப்பகுதியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதினால் சாலை விபத்து அதிகரிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது  வந்தது.அதன் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள போடி ரயில்வே ட்ராக் முதல் முதல் மாடக்குளம் வரை ,14வது நிதிக்குழு திட்டத்தின் 1800 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை,ரூபாய்  80 லட்சம்  மதிப்பீட்டில் போடப்பட்டது.6 முதல் 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்த விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வண்ணம் மதுரை மாநகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைகளில் உள்ளதைப் போன்று தரம் வாய்ந்த ஒரு பாதுகாப்பான சாலையை அமைத்தனர்.அதன் அடிப்படையில் மதுரை மாடக்குளம் கிராமத்தில் சாலை அமைக்கப்பட்ட இரண்டு பகுதிகளிலுமே வெள்ளைநிற அடையாள கோடு அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.குறிப்பாக இயந்திரத்தின் மூலம் பிரத்தியோக வெள்ளை பெயிண்ட் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் அடிக்கப்பட்டு,வேகத்தடைகள் இருக்கும் இடத்தில் முன்கூட்டியே வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வெள்ளை கூடுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வெள்ளை பெயிண்ட் அடிக்க படுவதால் அதிவேகமாக வரக்கூடிய வாகன ஓட்டிகள் , சாலையின் ஒரத்தினை  அடையாளம் கண்டு விபத்தை தடுக்கும் வண்ணம் வாகனம் ஓட்டலாம் என்று இந்தப் பணியில்  ஈடுபட்டுவரும் மதுரை மாநகராட்சி  நகர பொருளாளர் அரசு தெரிவித்தார் .மேலும் இந்த சாலை அமைக்கும் பணியானது 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் பகுதியில் விபத்துகளை குறைக்க புதிய தார்சாலை அமைத்ததோடு மட்டுமல்லாமல் சாலைகளில் இரண்டு பக்கவாட்டிலும் கோடுகள் அமைத்து பாதுகாப்பு வேலியை போன்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாநகராட்சிக்கு மாடக்குளம் பகுதி மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.ஊரடங்கு காலகட்டத்திலும் சில தரவுகளோடு தொடர்ந்து மக்களுக்கான பணியை தமிழக அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் துரிதமாக செயல் முறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!