Home செய்திகள் கொரானா ஊரடங்கு எதிரொலி பள்ளி கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளோடு தாயும் தந்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு தஞ்சம்

கொரானா ஊரடங்கு எதிரொலி பள்ளி கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளோடு தாயும் தந்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு தஞ்சம்

by mohan

கொரானா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தொழிலதிபர்கள் தொடங்கி சாதாரண நடுத்தர குடும்பத்தினர், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் பேச்சியம்மாள், சோலைப்பாண்டி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், சோனாலி பானர்ஜி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சோலைப்பாண்டி தையல் தொழிலும், பேச்சியம்மாள் கூலி வேலையும் பார்த்து மூத்த மகள் நன்றாக இந்தியை கற்றுக்கொண்டதால், அவரை பிரபலமான தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் சேர்த்து 7 முதல் 10 வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். சோனாலி பானர்ஜி படிப்பில் கெட்டிக்காரராக இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் 444 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்தார். இந்நிலையில் பதினொன்று வகுப்புக்கு லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருப்பதாலும், தற்போது கொரானா ஊரடங்கால் தொழில் சரிவர இல்லையென்பதாலும் மகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் வறுமையில் வாடியுள்ளனர். நல்ல மதிப்பெண்களை பெற்று மிகச்சிறந்த மாணவியாக சோனாலி பானர்ஜி இருந்தபோதிலும், அடுத்த வகுப்பிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்து வருகிறார். பெற்றோர் இத்தனை நாட்களாக கூலி வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்தே பள்ளிக்கட்டணம் செலுத்திய நிலையில், தற்போது வேலை இல்லாத நிலையில் ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் செலுத்த முடியாத காரணத்தினால் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மகளை சேர்க்க மதுரை ஆட்சியர் வினயின் உதவியை நாடி மகள் சோனாலி பானர்ஜியின் மதிப்பெண் சான்றிதழோடு தந்தையும் தாயும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தாருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கால் மகளின் கலேவி தடைப்பட்ட நிலையில் இறுதி முயற்சியாக ஆட்சியர் உதவி செய்ய கோரி கூலிகளான தாயும் தந்தையும் காத்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!