
சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு சில வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது தற்போது பெய்த மழையின் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மோட்டர் சைக்கிள்கள் விபத்துக்கு உள்ளாகி பொதுமக்கள் காயம்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர் .சமூக ஆர்வலர் துரைப்பாண்டி தெரிவித்தபோது :ரயில்வே பீடர் ரோடு சில ஆண்டுகளாக குண்டும் குழியும் ஏற்பட்டு பல இடையூறுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது இந்த வழியாக செல்லக்கூடிய மோட்டர் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து காயம்பட்டு வாகனமும் சேதமடைந்துள்ளது நடந்து செல்பவர்கள் தடுமாறிக் கீழே விழுந்து காயம் பட்டுள்ளனர். இதுகுறித்து ,பலமுறை புகார் தெரிவித்தும் இந்த ரயில்வேபீடர் ரோடு போடுவதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லையாம்.ஆகையால் ,மாவட்ட கலெக்டர் ரயில்வேபீடர் ரோடு குண்டும் குழியை சரிசெய்து புதியதாக தரமான ரோடு போடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் …வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.