Home செய்திகள் மருத்துவ சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

மருத்துவ சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

by mohan

கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை அருகே பூஞ்சுத்தி கிராமத்தில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்தலைமையில் ,மேலூர் சட்டமன்ற உறுப்பினர் .பி.பெரியபுள்ளான்(எ)செல்வம் முன்னிலையில் ஆய்வு செய்து தெரிவிக்கையில்:தற்போது உலகமே சந்தித்திராத ஒரு பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சவால்கள் பல சந்திக்கும் போதுதான் சாதனைகள் படைக்கமுடியும். தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறார். ஆரம்ப நிலையிலே ,கண்டறிவதற்காக அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அறிகுறி ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்வதற்கும் சிகிச்சை மேற்கொள்வதற்கும் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றுள்ளன. சென்னை மாவட்டத்திற்கு அடுத்து மதுரை மாவட்டத்தில் அதிகப்படியான கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களில், மதுரை மாவட்டத்தில் சுமார் 950 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்தார்.இந்த ஆய்வில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது தெரிவிக்கையில்:மதுரை மாவட்டத்தில் கிராமப் பகுதியில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற மருத்துவ முகாம்களில் கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!