மதுரையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் இறுதிநிலை தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்து 2019 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8888 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது மீதமுள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் காலிப்பணியிடங்களை தற்போதுள்ள கொரோனா காரணமாக தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வுகள் நடத்த இயலாத காரணத்தால் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு போக மீதம் உள்ளவர்கள் வயது அடிப்படைகள் இறுதி நிலையில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் காவலர்களை பணியிடங்களை நிரப்ப லாம் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் 6 மாத காலப் பயிற்சியின் போது நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க வேண்டாம் என்றும் கருணை அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் உடனடியாக பரிசீலனை பண்ண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..