திமுக சார்பில் சுதந்தர போராட்ட வீரர் அழகு முத்துகோனார் 263வது குருபூஜையை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனார் அவரின் 263வது குருபூஜையை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், கிழக்கு தொகுதி எம்எல்ஏ வுமான மூர்த்தி, மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகுமுத்து கோனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

முன்னதாக மறைந்த முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்….

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..