
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவுக் ஆஃ ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்தும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் குறித்தும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு.அதில் ஒரு பகுதியாக மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை யில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டரை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது
மதுரை மாவட்டம் நிர்வாகம் சார்பாக மதுரை முழுவதும் ஜூலை 4ஆம் தேதி முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் ஏற்பாடு செய்து அதில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுவதிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.அரசு ராஜாஜி மருத்துவமனையில் 462 சிலிண்டர் வசதியும், மதுரையில் உள்ள ஒவ்வொரு தாலுக்கா களிலும் 250 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும், urban health Centre 61 சிலிண்டர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு அதிகாரி சந்திரமோகன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி பிரியா ஆனந்த் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக 2000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இதன்மூலம் புறநகரில் இருந்து கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வருபவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது.ஆரம்ப நிலையில் நோய் தொற்றை கண்டறிவதன் மூலம் எளிதாக குணமடைய முடியும் என்பதால் பரிசோதனை அதிகரித்து உள்ளோம்.உரிய பாதுகாப்புடன் கொரோனா பரிசோதனை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குஇந்த நோய்த்தொற்று புதிதாக வந்துள்ளதால் இதுகுறித்து உரிய அறிவிப்புகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனை எடுக்கும் நபர்களுக்கு கொடுத்து வருகின்றனர். தவறுகள் அனைத்தும் திருத்தப்பட்டு வருகிறது.
விரைவாக பரிசோதனை முடிவு தரக்கூடிய ராபிட் ஆன்ட்டிஜன் டெஸ்ட் நடத்த வேண்டுமென மாணிக் தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு மக்களைக் காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பலர் பல ஆலோசனைகளை கூறி வருகின்றனர் இருந்தும் ஐ சி எம் ஆர் கொடுக்கின்ற அறிவுரையின்படி தமிழக அரசு சிகிச்சைகளும், ஏற்பாடுகளும் முறையாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.