
அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 4000 குடும்பங்கள் உள்ளன இங்கு இரண்டு நபர்களுக்கு கொரானா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இப்பகுதி கிராம மக்களிடம் நெருங்கி பழகிய தாக தெரியவந்துள்ளது .இந்த அபாயகரமான நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்திமுகவைச் சேர்ந்த துணைச் சேர்மன் ஆகியோர் சேர்ந்து பால்ராஜ் என்கிற கரிகாலன் மற்றும் காமாட்சி என்கிற மணிமாறன் ஆகியோர் உதவியுடன் வாரச்சந்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இப்பகுதியில் கொரானா தொற்று நோய் பரவி வரும் நிலையில் மீண்டும் திறக்கப்பட்ட வாரச்சந்தையில் கிராம பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் தெரியாமல் கூடியிருந்தனர் இப்பகுதியில் கொரோனா தொற்றுநோய் மேலும் பரவாமல் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இப்பகுதி கிராம மக்களுடைய அறியாமையைப் போக்கி தொற்று நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களுக்கு துணை போகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.