மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தற்காலிக மருத்துவமனை 500 படுக்கைகளுடன் தயாா்

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக மதுரையில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக  3 லாரிகள் மூலமாக சுமார் 500 படுக்கை வசதி கொண்ட மெத்தைகள் கட்டில்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வந்துள்ளது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களை இங்கே வைத்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன் முதற்கட்டமாக 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..