Home செய்திகள் உயர்அழுத்த மின் கம்பியில் உடைந்து விழுந்த மரம். உயிர் தப்பிய பெண்கள்…

உயர்அழுத்த மின் கம்பியில் உடைந்து விழுந்த மரம். உயிர் தப்பிய பெண்கள்…

by mohan

சோழவந்தான் பஸ்நிலைய அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் உடைந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூன்று பெண்கள் உயிர் தப்பினர்.சோழவந்தான் முன்னாள் கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டுப்போன மரம் முறிந்து உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்ததில் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரே இரும்பு பெரிய மின் கம்பம் சாய்ந்தது .இதன் அருகில் இருந்த சிக்னல் இரும்பு கம்பம் முறிந்து விழுந்தது .அப்போது அந்த வழியாக வந்த 3 பெண்கள் விழுவது சப்தம் கேட்டு ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த ரோடு வழியாக பஸ் நிலையம்,ரயில் நிலையம்,சப் ரிஜிஸ்டர்ஆபீஸ்,அரசுஆஸ்பத்திரி, பேரூராட்சி அலுவலகம்,சந்தை மற்றும் கடைவீதி ஆகியவற்றுக்கு சோழவந்தான் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ரோடு ஆகும். மாலைப் பொழுதுக்கு பின்னால் இச்சம்பவம் நடந்தது பெரிய அசம்பாவிதம் நடக்க இருந்தது தப்பித்தது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன்,போக்குவரத்து அலுவலர் பழனிமுத்துமின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனே வந்து உயர் அழுத்த மின்சார வயர் மீது உடைத்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!