Home செய்திகள் அரசு கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

அரசு கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

by mohan

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும், பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் போன்ற பொருட்களும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரு சிலர் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்ளமால் தெருக்களிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்தவும்.

• கொரோனா நொய் தொற்று முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் நிலையில் இருப்பதால் கொரோனா நோய்த்தொற்று பொது மக்களுக்கு பரவாமல் தடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

• இந்த உத்தரவுகள் 29.3.2020 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

காய்கறி பழ அங்காடிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும். வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல் சுமை தூக்கும் பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு சுகாதார முறைகளை கடைபிடித்தல் போன்றவற்ளை மாவட்ட ஆட்சி தலைவர் ஒரு சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் இந்த மார்க்கெட் பகுதிகளில் பொது சுகாதாரம் பேணப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்

• காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே தேவையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

• அதேபோல் பெட்ரோல் பங்க்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை மட்டுமே செயல்படும். எனினும் அரசு வாகனங்கள் 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்.

• மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

• வயது முதிர்ந்தோர்; வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர் சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இத்தகையோரின் நலன் கருதி “Swiggy, Zomato, Uber Eats” போன்ற நிறுவனங்களில் மூலம் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்சென்று வாங்க சிறப்பினமாக அனுமதிக்கப்படுகிறது. எனினும் இத்தகைய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களின் உடல்நிலையை தினந்தோறும் பரிசோதித்து பின்னர் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

• இத்தகைய கடுமையான சூழ்நிலையில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். சமைக்க தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம் இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிரிவை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம். • அரசு மருத்தவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புவோரும் மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்புவோரும் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள். இவற்றுக்கென அந்தந்த மாவட்டத்தில் ஒருசிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். • இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் போதிய சுகாதார முன்னெச்சரிக்கையுடன்இருக்க வேண்டும்.

• வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத தொழிலாளர்களுக்கு அவசர கால உதவியாக அந்தந்த மாவட்ட நிர்வாகமும் தேவைக்கு ஏற்ப உரிய வசதிகளை செய்து தர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

• 15.02.2020 க்கு பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த விபரத்தை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை சம்பந்தப்பட்ட நபர்களையும் அவர்களின் குடும்பங்களையும் சமுதாயத்திலுள்ள மற்ற மக்களையும் பாதுகாக்க வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட கூடிய நபர்களுக்கு சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் சுமார் 15000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!