Home செய்திகள் ஒரே இரவில் அதிரடியாய் மாறிய பழுதடைந்த பாலம்.

ஒரே இரவில் அதிரடியாய் மாறிய பழுதடைந்த பாலம்.

by mohan

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் இருந்து காளவாசல் செல்லக்கூடிய பைபாஸ் சாலை போடி லயன் VOC பாலம் கடந்த 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் மிகுந்த சிதிலமடைந்து கிடந்தது. இந்த பாலத்தில் தினசரி விபத்து மற்றும் அபாயகரமான பள்ளங்கள் தடுப்பு கம்பிகள் அனைத்தும் உடைந்து முட்புதர்கள் ஆக இந்த பாலமானது காட்சி அளித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் போடி லயன் அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின் இந்த பாலத்தில் சிதிலமடைந்து கண்டு நமது கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ்) இது தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தோம். அதிரடியாக களம் இறங்கிய மதுரை மாவட்ட நிர்வாகம்  இரவோடு இரவாக பாலம் முழுவதையும் புது சாலைகள் போடப்பட்டு தடுப்பு வேலிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது . தினசரி அந்த பகுதியில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.  இரவு வரை பாலம் சிதலமடைந்து இருந்தது.  காலை புத்தம்புதிதாக காட்சியளிக்கிறது. எனவே ஒரே இரவில் எவ்வளவு மாற்றம் செய்ய முடியுமா எனவும் இவ்வாறு அனைத்து பகுதிகளிலும் பழுதாகி உள்ள சாலைகள் அனைத்தையும் சீர்செய்து வாகன ஓட்டிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் சரி நம்மால் முடிந்தது. இந்த பாலத்தை சரி செய்ய வைத்தது மனநிம்மதியும் வாகன ஓட்டிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் கிடைத்தது என சந்தோஷத்தில் இந்த செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!