Home செய்திகள் கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து பள்ளியில் விளக்கம்

கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து பள்ளியில் விளக்கம்

by mohan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆறாம் வகுப்பு மாணவி நதியா பாதுகாப்பாக இருக்க கைகளை கழுவும் முறைகளை செய்து காண்பித்தார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ளவும், பரவுவதை தடுக்கவும், மத்திய அரசு அலைபேசி வாயிலாக ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு தகவல்கள் மாணவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். எப்போதும், கைக்குட்டை மற்றும் கை துடைக்கும் தாள்களால், இருமல், தும்மல் வரும் போது, வாயை மூடிக் கொள்ளுங்கள்; கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். உங்களது கண், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடாதீர்கள்.’இருமல், காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து, 1 மீட்டர் இடைவெளி விட்டு நில்லுங்கள்; அவசர உதவிக்கு அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு செல்லுங்கள் அல்லது, 011 – 2397 8046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற தகவல் விளக்கப்பட்டது. ‘பள்ளி மாணவர்கள் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சோப்பால் கைகளை கழுவ வேண்டும். யாருக்கும் கைகளை கொடுக்காதீர்கள்.தமிழ்முறைப்படி இரு கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள்.என்பன உள்ளிட்ட அறிவுரைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது..கைகழுவும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் வழங்கினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!