மதுரை ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழி அனுப்பி வைத்தார். குழந்தை ஒருவருக்கு நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டு பணம் கொடுத்து வழியனுப்பிய மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்.
மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் நேற்று பலியானவர்களின் உடன் பயணித்த ரயில் பயணிகள் 28 பேர் இன்று பகல் 12:00 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரையில் இருந்து டெல்லி செல்லும் இன்டிகோ விமானம் மூலம் பகல் 2.30 மணி க்கு 28 பேர் புறப்பட்டு செல்கின்றனர். இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை தென்னக ரயில்வே மதுரை கோட்டம் செய்தது இதனை தொடர்ந்து 28 பயணிகள் அனைவரும். மதுரை விமான வந்தடைந்தனர் அவர்களை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழி அனுப்பி வைத்தார்
மீதமுள்ள ஐந்து பயணிகள் மாலை ஐந்து முப்பது மணி அளவில் indigo விமான மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரில் இருந்து டெல்லி செல்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.