Home செய்திகள் பெண் ஒருவர் இறந்ததால் திருக்கடையூர் பகுதியில் டி.எஸ்.பி ஆய்வு

பெண் ஒருவர் இறந்ததால் திருக்கடையூர் பகுதியில் டி.எஸ்.பி ஆய்வு

by mohan

திருக்கடையூரில் பெண் ஒருவர் இறந்ததால் முன்னெச்செரிக்கை நடிவடிக்கையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டம் திருக்கடையூர் கடைதெருவில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான மளிகை கடை, பால் கடை, காய்கறி கடை, இறச்சிக்கடை உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருக்கடையூர் பகுதியில் ஒரு பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ? என்ற அச்சத்தால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் இரத்த பரிசோதனை வரும் வரை அனைத்துக்கடைகளையும் தொடர்ந்து அடைக்க வேண்டுமென நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் உத்தரவிட்டார். மேற்கண்ட பகுதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தினர் பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினியை தெளித்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு கொரோனா டி.எஸ்.பி இளஞ்செழியன், பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், சுகாதரத்துறையினர் ஆகியோர் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மேற்கண்ட கிராமமக்களிடையே கொரோனா வைரஸ் குறித்தும் சமூக விலகல் குறித்தும் இளைஞர்கள் மத்தியில் டிஎஸ்பி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேற்கண்ட கிராமப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!