Home செய்திகள் புதுமாப்பிள்ளை உபசரிப்புடன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் “மாப்பிள்ளை” உணவகம்…

புதுமாப்பிள்ளை உபசரிப்புடன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் “மாப்பிள்ளை” உணவகம்…

by ஆசிரியர்

நவீன சென்னையில் வளர்ந்து வரும் முதற்கட்ட மேற்கத்திய உணவகத்தின் மத்தியில் ஒரு வித்தியாசாமான, பழகிய உணவு வகைகள், ஆனால் மேற்கத்திய பெயர் சாடையுடன் வாய்க்கு ருசியாக.  இது தமிழக சுவையா?? கேரளத்து மணமா? இல்லை மேற்கத்திய உணவா என்ற ஆவலை உண்டாக்கியது கடந்த வெள்ளி அன்று சென்னை கீழ்பாக்கத்தில் திறக்கப்பட்ட “மாப்பிள்ளை” உணவகத்தின் மூன்றாவது கிளை. அந்த உணவகத்தின் உள்ளே சென்றுதான் பார்ப்போமே..??

நாம் உணவகத்தின் உள்ளே நுழைந்ததும் நம்மை “சிவாஜி”, “தளபதி”, “தல” என வரவேற்கிறார்கள்.  ஆமாம், அங்கு இருக்கும் ஊழியாகள் அனைவருக்கும் சினிமாவில் வலம் வந்த மிக பிரபல்யமான பாத்திரங்களின் பெயர்களே. நாம் உள்ளே நுழைந்தவுடன் ஒரு புது மாப்பிள்ளையை அழைத்துச் செல்வது போல் வரவேற்று அமர வைக்கிறார்கள்.

நாம் அமர்ந்து என்ன வகையான உணவு என்று சிந்திக்கும் பொழுதே தமிழும் கேரள சுவையின் பெயர்களோடு தொடக்க உணவுகளாக, வாழைப்பூ கோலா உருண்டை, நெய்யில் வறுத்த கோழி, நாட்டு கோழி சூப், நாட்டு கோழி எக் ட்ராப் ( Egg Drop) என ஆங்கில வாடையும் சுவையும் கலந்த சுவையான சூப் வகைகள்.

அடுத்து உணவு வகைகளும் வித்தியாசமான பெயர்களுடன் நாவுக்கு சுவையாக, காய்ன் புரோட்டோ, முட்டை தோசை, கல் தோசை, பல வகையான பிரயாணிகள், சாதா தோசை, சுட்ட கோழி, மீன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி என கலவையான சுவையுடன் உணவுகள்.  மொத்தத்தில் இந்த உணவகத்தை ஒரு குறிப்பிட்ட சுவையை தரும் உணவகம் என ஒரு வட்டத்திற்குள் அடைக்காமல் எல்லா சுவைகளும் கலந்த உணவகம், அதாவது ஆங்கிலத்தில் ஒரு “FUSION RESTAURANT” என கூறலாம்.

அதே போல் வகை வகையான குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம் வகைகளுக்கும் பஞ்சமில்லை, அதிலும் “கருப்பட்டி திமுசி”, “சுகர் கேன் மஜிடோ”, “மாப்பிள்ளை ரோஸ்மில்க்”, “நன்னாரி சர்பத்” என அனைத்துக் கலவையுடன்.

உணவை முடித்து விட்டு வெளியேறினால், நம்மை பள்ளிக்கூட கால ஞாபகத்தை ஏற்படுத்தும் “பெட்டிக்கடை” வண்டி.  இதில் தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய், கொக்கச்சி, கடலை மிட்டாய் என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்.

ருசியான உணவை விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த “மாப்பிள்ளை” உணவகம் மனதுக்கு விரும்பும் சுவையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இந்த உணவகத்தில் வகைகளை Zomato தளத்திலும் சென்று பார்வையிடலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!