
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதமாக உபகரணங்கள் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலம் இன்று வழங்கப்பட்டது,
அதனை தொடர்ந்து மண்டபம் பேரூராட்சிக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம், கை கழுவுதல் இயந்திரம் வழங்கப்பட்டது. பேரூராட்சி கணக்கு அப்புச்சாமி தெருவில் வசிக்கும் மக்களிடம் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக கை சுத்திகரிப்பான் பேரூராட்சி செயல் அலுவலர் கி. ஜனார்த்தனன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் சு.முனியசாமி துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஜாகீர் உசேன், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன திட்ட மேலாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.