
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆரோக்யா மருத்துவமனை பேங்க் ஆப் பரோடா ஸ்டார் ஹெல்த் அலைய்டு இன்சூரன்ஸ் இணைந்து இலவச மருத்துவ முகாம்மை மரைக்காயர் கட்டிடத்தில் நடத்தப்பட்டது.
இம்முகாம்மில் 1 வயது முதல் 60 வயதுக்கும் மேற்பட்ட வயதினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, கண், கிட்னி பரிசோதனை, கொழுப்பு அளவு பரிசோதனை, கல்லீரல், மண் ஈரல் பரிசோதனை, ஈ.சி.ஜி, இருதய எக்கோ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி இலவச மருத்துகளை பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர் பரணி குமார், பேங்க் ஆப் பரோடா கிளை மேலாளர் விஷ்ணு பேபி, மரைன் பொது மேலாளர் சுதாகரன் நாயர், ராஜா மேல்நிலை பள்ளி தாளாளர் ராஜா, பெட்ரோல் பேங்க் அன்வர் அலி, இராமநாதபுரம் ஸ்டார் ஹெல்த் அலைய்டு இன்சூரன்ஸ் கிளை மேலாளர் வீரமணி மாறான், விற்பனை மேலாளர் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.