Home செய்திகள் ” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு.

” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு.

by mohan

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு நடைபெறுகிறது.சர்வதேச அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உடன் இணைந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மற்றும் இயற்பியல் துறை ஆகிய இணைந்து” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது.தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சென்னை பிரிவு தலைவர் முனைவர் கொக்குமரன் தொடக்க உரையாற்றினார் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் பாலாஜி சீனிவாசன் சிறப்புரையாற்றினார் இந்த மாநாட்டின் கருப்பொருளானது எதிர்கால தொழில்நுட்ப பாதையை வடிவமைக்கும் முக்கியத்துன்கள் என குறிப்பிட்டார் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எம் பழனி நகராஜா தலைமை வைத்தார். மாநாட்டின் ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வெங்கடேஷ் முனைவர் சார்லஸ் ராஜா முனைவர் ஆனந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.iCEMCE–2023 சர்வதேச மாநாட்டின் நோக்கம் ஆராய்ச்சி மாணவர்கள் பொறியாளர்கள் பேராசிரியர்கள் உள்ளடக்கி இந்த மாநாட்டின் கருப்பொருள் பற்றிய சமீபத்திய முன்னேற்பாடுகளை குறித்து ஆராய்தல் மாநாட்டை நேரடியாகவும் இணையதள வழியாகவும் சுமார் 150 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு பேராசிரியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com