Home செய்திகள் மக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. !

மக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. !

by ஆசிரியர்

இராமநாதபுரம்  மாவட்ட மக்கள் பாதை சார்பாக     சிறப்பு இலவச மருத்துவ முகாம் இராஜசிங்கமங்கலத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு மருத்துவர் ரஜினிகாந்த் MS (ENT) சிகிச்சை அளித்தார் . இந்த நிகழ்வில் சுமார் 85 பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கினார். இராஜசிங்கமங்கலம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பஷீர் முன்னிலை வகித்தார். மேலும் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர் பாதுஷா , மக்கள் பாதை தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட நலம் திட்ட பொறுப்பாளர் துரை பிரேம் ஏற்பாடு செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!