Home செய்திகள் பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..

பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..

by Askar

பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..

மதுரை அடுத்துள்ள பூவந்தி சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எஸ். அண்ணாமலை தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் விசுமதி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அசோக் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது;

இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள் ஒவ்வொரு மாணவியரும் ஐந்து வருடத்தில் நாம் என்னவாக வேண்டும் என்ற கனவை மனதில் நிலை நிறுத்தி செயலாற்றினால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடியும். இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் போட்டி போட்டுக் கொண்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை நாம் அடக்கி ஆளக்கூடாது. ஒவ்வொருவரும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் போது தடை கற்கள் வரும்.அதை நாம் படிக் கற்களாக கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார். அவரை கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் பூங்குழலி அறிமுகம் செய்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வரதராஜன், சிவக்குமார், சிவகாசி நாடார்கள் உறவின்முறை செயலாளர் கோடீஸ்வரன் பொருளாளர் ஸ்ரீதர், ராமேஸ்வரி அண்ணாமலைஉட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்டு விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரி தலைவர் அண்ணாமலை, செயலாளர் அசோக் உட்பட பலர் செய்திருந்தனர்.‌

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!