Home செய்திகள்உலக செய்திகள் மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்; செய்தியாளர் சந்திப்பு..

மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்; செய்தியாளர் சந்திப்பு..

by Abubakker Sithik

மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்..

மதுரை அவனியாபுரத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட பேரமைப்பு தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை கூறினார் மாநில பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமை உரை ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக மே ஐந்தாம் தேதி வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதுவரை 40 மாநாடுகள் நடத்தி இருக்கிறோம் இதுவரை காலையிலிருந்து மாலை முதல் வரை நடைபெறும். ஆனால் இந்த மாநாடு மாலை 4 மணி அளவில் தூங்குகிறோம். இந்த மாநாட்டில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து பல லட்சம் வணிகர்கள் வர உள்ளனர்.

குறிப்பாக மதுரையில் இருந்து பத்தாயிரம் வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் எங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமையான சட்ட விதிகளை அகற்ற கோரியும், சட்ட விதிகள் அமல்படுத்தும் போது வணிகர் சங்கத்தினரை அழைத்து பேச கோரியும் சாமானிய வணிகர்களை வரி சீரமைப்பு எனும் பேரில் கடைக்கு சீல் வைப்பு நடவடிக்கையை நிறுத்த கோரியும், கப்பலூர் டோல்கேட்டில் கடுமையான கட்டணம் வசூலிப்பதை கண்டித்து டோல்கேட்டை அகற்றக் கோரியும் பல்வேறு பிரகடன தீர்மானத்தை இந்த மாநாட்டில் அறிவிக்க உள்ளோம்.

இந்த மாநாடு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமையும்முன் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக இந்த மாநாடு நடைபெறுகிறது. வணிகர்களின் தாகத்தை நிறைவேற்றக் கூடிய புதிய அரசு வணிகர்களை அழைத்து ஆலோசனை பெறக்கூடிய மாநாடாக இது அமையும். இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த மாநாட்டில் சிறு வணிகர்களின் பாதுகாப்பில்லாத சூழ்நிலை விளக்கப்பட உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அமல்படுத்தும் போது சிறுவணிகர்கள் நிலை குறித்து விளக்க “விடுதலை முழக்க மாநாடு” நடைபெறுகிறது.

சிறு வணிகர்களை பாதுகாக்க இந்த அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வணிகர்களை தாக்குகிறவர்கள் வணிகரிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு தாக்குபவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கான சிறப்பு சட்டங்கள் உள்ளது போல் வணிகர்களுக்கு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். வணிகர்களை தாக்கி காயத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது சிறப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும். வணிகர்கள் மக்களிடம் சேவை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வணிக விடுதலை முழக்க மாநாட்டில் பிரகடனத்தை அறிவிக்க உள்ளோம்

தேர்தல் நேரத்தில் ரூபாய் 50 ஆயிரம் மேல் கொண்டு செல்ல தடை குறித்த கேள்விக்கு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உண்டு 15 லட்சம் செலவு செய்ய வேண்டும் என்று கூறி இன்று 95 லட்சம் செலவு செய்ய சட்ட மாறுதல் கொண்டு வந்துள்ளது. அதேபோல் வணிகர்களுக்கும் சட்ட விதிகளில் மாறுதல் கொண்டு வர வேண்டும். 50,000 என்பது மிகவும் சொற்பத்தொகையாக உள்ளது 2 லட்சம் என்பதை மாற்ற வேண்டும். கரூரில் 47000 பணத்தை கொண்டு வந்த வியாபாரியை தாக்கி அதிகாரிகள் பறித்த இது போன்ற நிலைப்பாடுகளை காண முடிகிறது. மேலும் பணத்தைக் கொண்டு கருவூலத்தில் செலுத்தினாலும் அன்றைய தினத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

அரசியல் கட்சிகள் எங்கு பணம் வைத்துள்ளனர் எங்கு கொண்டு போகின்றனர் என்பதை எல்லாம் அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் பறிக்கப்படுவது எல்லாம் சாமானிய பொதுமக்கள் பணம் வணிகர்கள் பணம் மட்டுமே. திமுக தேர்தல் அறிக்கையில் டோல் கேட் அகற்றம் குறித்த கேள்விக்கு டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். செங்கல்பட்டு டோல்கேட்டில் அகற்றக்கோரி போராட்டம் ஈடுபட்டுள்ளோம். சென்னையில் கூட போருரில் இருந்து மூன்று டோல்கேட் உள்ளது. மொத்தம் 37 டோல்கேட்கள் உள்ளது இவற்றை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி உள்ளோம். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூட காலவதியான டோல் கேட் அகற்ற கூறியுள்ளார். டோல்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதுரையை சுற்றி 5 டோல் உள்ளது குறித்த கேள்விக்கு, மதுரை மக்கள் சகிப்புத்தன்மையுடன் இருப்பவர்கள். முன்பு 50 காசு பெட்ரோல், டீசல் விலை ஏறினால் 100 போராட்டங்கள் நடைபெறும். இப்ப மக்கள் போராட்டம் செய்வது விட்டு விட்டார்கள். மருத்துவர்கள் கூறிய போல் சுகரை குறைக்க வேண்டும் என்று கூறியது போல் மக்களுக்கு உணர்வுகளை குறைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் வணிகர் சங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுக்கும். ஜிஎஸ்டி போன்ற குளறுபடுகள் உள்ள சூழ்நிலையில், சாதாரண வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் தான் வரிகள் கிடைக்கின்றது என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால் ஒரு சிகரெட்டு வியாபாரி கூட வரி கட்டி தான் சிகரெட் விற்பனை செய்கிறார் அரசு சாமானியர்களை ஒதுக்கி விட்டால் இந்தியா முழுவதும் 21 கோடி வியாபாரிகள் உள்ளோம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருமா?

எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்ற துறை வணிகர் சங்கம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வணிகர் சங்க நிலை குறித்த கேள்விக்கு? எங்கள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துப்பூர்வமாக தரும் கட்சிகளுக்கு எங்கள் ஆதரவை பொதுக்குழு மூலம் அறிவிப்போம். பெயர் பலகை தமிழில் திறப்பது குறித்த கேள்விக்கு முன்பெல்லாம் ஒரு ஊருக்கு சென்றால் ஊரின் முகவரி கடை விலாசம் போன்றவை இருக்கும். ஆனால் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் வந்ததால் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெயர் மட்டுமே உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தற்போது தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று கூறுகிறோம். எந்த மொழியில் வைத்திருந்தாலும் நீங்கள் ஆனால் தமிழ் மொழியில் பேர் பலகை வைக்க வேண்டும் என்றும், ஊரின் பெயரை போட வேண்டும் என்று கூறுகிறோம் என விக்ரமராஜா கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!