Home செய்திகள்உலக செய்திகள் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..

by Abubakker Sithik

மதுரையில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்ததில் பணிபுரியும் போர்மேனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியை சேர்ந்த பிரிட்டோ சகாயராஜ் என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு மதுரை விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போர்மென் ஜான் கென்னடி என்பவர் 20ஆயிரம் லஞ்சம் கேட்ட பின்னர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் இணைப்பு பெற்று தருகிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து பிரிட்டோ சகாயராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலனுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய லஞ்ச பணம் 17ஆயிரம் ரூபாயை பிரிட்டோ சகாயாராஜ் இன்று மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அதனை ஜான் கென்னடியிடம் கொடுத்த போது லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக ஜான் கென்னடியை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் மின் இணைப்பிற்கு லஞ்சம் கேட்ட போர்மெனை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!