புறாவை விழுங்கிய நல்ல பாம்பு! விழுங்கிய புறாவை மீண்டும் கக்கும் வீடியோ இணையத்தில் வைரல்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருநகர் நெல்லையப்பபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் சிவா இவர் அவரது வீட்டில் புறாக்கள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று இவரது புறா கூண்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்து உள்ளே இருந்த புறா ஒன்றை விழுங்கிவிட்டு கூண்டிலேயே இருந்துள்ளது.
சிவா எப்போதும் போல் வழக்கமாக காலையில் புறாக்களை திறந்து விடுவதற்காக கூண்டை திறந்த போது உள்ளே நல்ல பாம்பு ஒன்று சுருண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே அங்கு வந்த பாபு 5 அடி நீளம் கொண்ட. நல்ல பாம்பை மீட்கும் முயற்சியின் போது நல்ல பாம்பு உடனே விழுங்கிய புறாவை கக்கிவிட்டு தப்பிக்க முயன்றது பின்னர் லாவகமாக பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.
கூண்டுக்குள் இருந்த புறாவை விழுங்கிய நிலையில் மீண்டும் புறாவை கக்கும் நல்ல பாம்பின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது..
You must be logged in to post a comment.