பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக, ரூ 44 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிறுவனரிடம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ,கடந்த 1992 – 96 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள், இக்கல்லூரியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக ரூபாய் 44 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிறுவனர் ஹரி தியாகராஜனிடம் வழங்கினர்.
மேலும் , இதுவரை முன்னாள் மாணவர்கள் அளித்த தொகையான ரூபாய் 5 கோடியிலிருந்து, 10 கோடி வரை சிறந்த மாணவர்களாக விளங்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் மிகப்பெரிய நிறுவனத்தில் அதிகாரிகளாகவும், வெளிநாடுகளில் தொழில் அதிபராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக , கல்லூரியில் கட்டிடக்கலை வடிவமைப்புக்கான கண்காட்சி நடைபெற்றது. இதில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். கோவில் மாநகரமான மதுரையின் சமூகத்திற்கான பொது இடங்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து கட்டிடக்கலை துறை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளக்க உரை அளித்தார். இதனைத் தொடர்ந்து , கல்லூரி நிறுவனர் ஹரி தியாகராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், தற்போது நிலவி வரும் பொருளாதாரத்தின் மந்த நிலையே காரணமாக இருப்பதால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகி வருகிறது .இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மந்த நிலை சீராக அமையும் , அப்போது அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கான உறுதி அளிக்கப்படும் என்றார்..செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.