மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் போதைப்பொருள் புழக்கம் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக அரசுக்கு எதிராக நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் போதை பொருள் புழக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்த காரணமாக உள்ள திமுக அரசை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர். போதைப் பொருட்கள் முழக்கம் அதிகரித்துள்ளதால் முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தற்போது தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் போதைப் பொருள் புழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் போதைப்பொருட்கள் கடத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றதால் கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து பணிமனை வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திமுக அரசை கண்டித்தும், போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் தற்போது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சாதாரண ஆளாக இருந்த ஜாபர் சாதிக் 20ஆயிரம் கோடிக்கு அதிபராக மாறி உள்ளதற்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலின் குடும்பமே காரணம். தற்போது தமிழக காவல்துறை செயல் இழந்து கிடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் பரிமாணம் செய்யப்பட்டு வருகிறது. தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி இடம் ஒரு கோடி கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள் என்றால் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்க அல்வா கொடுத்துள்ளார்கள் ஜாபர் சாதிக்கிறே அல்வா கொடுக்கும் நிலைதான் திமுகவில் உள்ளது எனவே ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கையாக போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக முதல்வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். செய்தியாளர் வி காளமேகம்
72
You must be logged in to post a comment.