கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி மேற் பார்வையில் சிறந்த பெண் ஆசிரியர்களை கொண்டு ஆலிமா பாடத்திற்க்கான மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது.

இவ்வகுப்புகள் மாலை 4 மணி முதல் சிறுவர்களுக்கு மஃக்தப் வகுப்புகளும், மாலை 5:30 மணி முதல் 6:30 பெண்களுக்கான 6 மாத பட்டயப்படிப்பு (Certificate Course) மற்றும் முபல்லிஹா வகுப்பு காலை 7 மணி முதல் 9 மணி வரை பெண்களுக்கான ஆலிமா பட்டத்திற்க்கான வகுப்புகளுடன் நடைபெறுகிறது.

இந்த ஆலிமா வகுப்பில் சேர தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். குர்ஆன் ஓத தெரிந்திருக்க வேண்டும். மேலும் இவ்வகுப்பில் சேர வயது வரம்பு இல்லை.

மேல் விபரங்களிக்கு கீழே உள்ள முகவரி மற்றும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்…

மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை) சங்குவெட்டித் தெரு கீழக்கரை

பெண்கள் : 9791611928 ஆண்கள் : 9952399119