Home செய்திகள் பருத்தி செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல் -விவசாயிகள் கவலை எம்எல்ஏ நேரில் ஆய்வு

பருத்தி செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல் -விவசாயிகள் கவலை எம்எல்ஏ நேரில் ஆய்வு

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள பாலூரில் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகளில் வெட்டுக்கிளிகள் செடிகளை தின்று நாசப்படுத்தி உள்ளது. அதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகளில் பூ மற்றும் காய்கள் உள்ளது நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பூ, காய்கள் மற்றும் செடிகளை  தின்று நாசப்படுத்தி வருகிறது. தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பாலூரில் விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகளை வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் செடிகளைத் தின்று நாசப்படுத்தி வருவதை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் விவசாயிகளிடம் கூறியதாவது :-

இந்தவகை வெட்டுகிளி உள்ளூர் ரக வெட்டுக்கிளி ஆகும். வடநாட்டில் விவசாய நிலங்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் இல்லை. பெரும்பாலும் இந்த வகையான வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளில் காணப்படும். மேலும் பருத்தி செடிகளை நாசப்படுத்தும் இந்த வகையான வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள், மற்றும் அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்று பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மருந்துகள் வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வேளாண்துறை அதிகாரிகள்  மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!