Home செய்திகள் சீர்காழி அருகே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பாட்டியை அழைத்துச் செல்ல வந்த மருத்துவர்கள் தூக்காமல் வீட்டில் உள்ளவர்களை தூக்கச் சொல்லி 108 வாகனத்தில் ஏற்றி விடும் அவல நிலை:-

சீர்காழி அருகே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பாட்டியை அழைத்துச் செல்ல வந்த மருத்துவர்கள் தூக்காமல் வீட்டில் உள்ளவர்களை தூக்கச் சொல்லி 108 வாகனத்தில் ஏற்றி விடும் அவல நிலை:-

by mohan

; கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாட்டி சாயாவனம் (68) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமல், சளி தொல்லையால் அவதியுற்று உள்ளார் அதனை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துமனைக்கு பரிந்துரை செய்து, சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாட்டிக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்கு அவரிடமிருந்து சளி மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இதனையடுத்து அவரை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறையினர். அவரை வீட்டிலிருந்து 108 வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்வராமல் அவரது உறவினர்களை அழைத்து வாகனத்தில் ஏற்ற கூறியுள்ளனர்.கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரை சுகாதார துறையினரே அழைத்துச் சென்று வாகனத்தில் ஏற்றாமல் உறவினர்களை விட்டு ஏற்றுத் சொல்லிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!